New Updates! Fresh news just arrived.

வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்: சுகாதார ...

News

வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்: சுகாதார ஊழியர் உயிரிழப்பு!

September 26, 2026 5:50 pm
வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்: சுகாதார ஊழியர் உயிரிழப்பு!
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறைப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுகாதார ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கல்ஓயா பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் சமையலறைப் பகுதியில் இன்று (26) அதிகாலை 4.00 மணியளவில் ஏற்பட்ட இந்த வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் படுகாயமடைந்த மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவரே தற்போது உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைத்தியசாலையின் பிரதான சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக எரிவாயு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இது தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெடிப்பு காரணமாக அருகிலிருந்த சில கட்டிடங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தினால் வைத்தயசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்ட போதிலும், வைத்தியசாலையின் ஒரு பகுதியில் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும், விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், இந்த வெடிப்புச் சம்பவத்தினால் வைத்தியசாலையில் இருந்த நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறைப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு குறித்து ஆராய்வதற்காக 2 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now