New Updates! Fresh news just arrived.

ஏமன் துறைமுக நகரை கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்! - Gu...

News

ஏமன் துறைமுக நகரை கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்!

September 11, 2026 7:51 am
ஏமன் துறைமுக நகரை கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்!
ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் முக்கிய துறைமுக நகரமான மோகாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து செங்கடலின் தெற்கு நுழைவாயிலான பாப் எல்-மண்டேப் நீரிணை மற்றும் ஹனிஷ் தீவுகள் நோக்கியும் ஹூதிகள் முன்னேறியுள்ளதாக ஏமன் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் பகுதிகளில் ஹூதிகளின் ஆதிக்கம் அதிகரிப்பது, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கும் எண்ணெய் விநியோகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, ஏமன் அரசாங்கப் படைகள் செங்கடல் கரையோரப் பகுதியில் தெற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும் ரொயிட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now