New Updates! Fresh news just arrived.

போதைப்பொருளின் சந்தை விலை நிர்ணயம் எவ்வாறு கணக்கிடப்படுகி...

News

போதைப்பொருளின் சந்தை விலை நிர்ணயம் எவ்வாறு கணக்கிடப்படுகின்றது: ஜனாதிபதிக்கு விளக்கமளித்த அதிகாரிகள்!

July 29, 2026 12:50 pm
போதைப்பொருளின் சந்தை விலை நிர்ணயம் எவ்வாறு கணக்கிடப்படுகின்றது: ஜனாதிபதிக்கு விளக்கமளித்த அதிகாரிகள்!
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது பறிமுதல் செய்யப்படுகின்ற போதைப்பொருட்களினுடைய சந்தை மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்பது தொடர்பில் ஜனாதிபதி காவல்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

காலி மாவட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில் ஜனாதிபதி குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதன்படி, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்ற "முழுநாடும் ஒன்றாக " போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தினுடைய முன்னேற்றம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள், இந்தக் கூட்டத்தில்; விளக்கமளித்தனர்.

இதன்போது, பறிமுதல் செய்யப்படுகின்ற போதைப்பொருட்களினுடைய பணமதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பொலிஸார், பல்வேறு பகுதிகளில் நிலவும் போதைப்பொருளினுடைய தற்போதைய சந்தை விலை அடிப்படையிலேயே குறித்த மதிப்பீடுகள் கணக்கிடப்படுவதாக தெரிவித்தனர்.

உதாரணமாக, காலி பகுதியில் 70 தொடக்கம் 80 மில்லிகிராம் கொண்ட ஹெரோயின் பொதியொன்று சுமார் 2,000 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும், கொழும்பு உட்பட்ட நாட்டின் பிற பகுதிகளில் இதன் விலைகள் மாறுபடுவதாகவும் பொலிஸ் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

மேலும்,காலி மாவட்டத்தில் இவ்வருடத்துக்குள் இதுவரைக்கும் 2,607 போதைப்பொருள் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் ஊடாக சுமார் 119 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்தோடு, நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களினுடைய சொத்துகள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போலிஸார் தெரிவித்தனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now