கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் திருட்டுகளால் பெரும் நி...
News
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் திருட்டுகளால் பெரும் நிதி இழப்பு!
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின் கேபிள்கள், செப்பு கம்பிகள் மற்றும் மின்விளக்குக் கம்பங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 100 திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 11 சம்பவங்களால் ஏற்பட்ட இழப்பு 580 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஏனைய 89 சம்பவங்களின் பெறுமதி கணக்கிடப்படவில்லை.
மின் கேபிள்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்காததால் அவற்றை இலகுவாக அகற்றக்கூடிய நிலை காணப்பட்டதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், திருட்டுகளைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையும், பொறுப்பான அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க 1,770 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.