New Updates! Fresh news just arrived.

இன்று மேலும் தீவிரமடையும் அக்வான் புயல்!

News

இன்று மேலும் தீவிரமடையும் அக்வான் புயல்!

November 17, 2026 9:23 am
இன்று மேலும் தீவிரமடையும் அக்வான் புயல்!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை அண்மித்துள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள அக்வான் புயல் இன்று (17) மேலும் வலுவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அக்வான் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு-மத்திய வங்கக்கடல் பகுதியில் கடுமையான புயலாக வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 19ஆம் திகதி அதிகாலை 05.30 மணியளவில் மிகக் கடுமையான புயலாக மேலும் வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் புயல், எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி முற்பகல் 11.30 மணியளவில் மிகப் பலத்த புயலாக இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானாம் கடற்கரைப் பகுதியில், நெல்லூர் மற்றும் துனி ஆகிய இடங்களுக்கு இடையில் இந்தியக் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now