New Updates! Fresh news just arrived.

சட்டத்தினை பயன்படுத்தி வெளியேற்றிவிட்டு சபையினை நடாத்துவே...

News

சட்டத்தினை பயன்படுத்தி வெளியேற்றிவிட்டு சபையினை நடாத்துவேன்: தவிசாளர் ஜெசீதன் எச்சரிக்கை!

January 24, 2026 10:54 am
சட்டத்தினை பயன்படுத்தி வெளியேற்றிவிட்டு சபையினை நடாத்துவேன்: தவிசாளர் ஜெசீதன் எச்சரிக்கை!
வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையினுடைய மாதாந்த அமர்வு நேற்ரூ (23) தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது எருக்கலம் பிட்டி மயானம் புனரமைப்பு தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினுடைய உறுப்பினர் நா.பகீரதன் கருத்து தெரிவிக்கையில்,

எருக்கலம்பிட்டி இந்து மயானத்திலுள்ள மண்டபமானது புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற தனிநபரினால் கட்டி தரப்பட்டது. அதனை கட்டி தந்தவர் அதனை மீளவும் புனரமைப்பதற்கு தற்போது தீர்மானித்திருக்கின்றார்.

ஆகவே, குறித்த நபரிடம் நிதியினை பெற்று, பிரதேச சபையே அந்த வேவைத்திட்டத்தினை செய்யலாம் என கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட இலங்கை தமிழரசு கட்சியினுடைய உறுப்பினர் தயாபரன், அவ்வாறு வழங்க முடியாது என கூறி முரணபாட்டில் ஈடுபட, குறுக்கிட்டு உறுப்பினர் பகீரதன் "நீங்கள் பேருந்து தரிப்பு நிலையத்தினை இடிக்க கையூட்டு பெற்றீர்கள்" என தெரிவித்தார். இதன்போது அங்கு கடுமையான கருத்து மோதலானது ஏற்பட்டு சபையில் அமைதியின்மையானது நிலவியது.

இதன்போது குறுக்கிட்ட தவிசாளரான ஜெசீதன் உறுப்பினர் தயாபரனை பார்த்து "சட்டத்தினை பயன்படுத்தி வெளியேற்றிவிட்டு சபையினை நடாத்த வேண்டி வரும். அவர் தனது கருத்தை சொல்வதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். நீங்கள் குறுக்கிடாதீர்கள். குறித்த மண்டபத்தினை கட்டியவரே மீள் புனரமைக்கட்டும்" எனவும் குறிப்பிட்டார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now