New Updates! Fresh news just arrived.

கடற்கரையில் பிடிபட்ட படகில் ஐஸ் மற்றும் ஹெரோயின்

News

கடற்கரையில் பிடிபட்ட படகில் ஐஸ் மற்றும் ஹெரோயின்

September 27, 2026 11:51 am
கடற்கரையில் பிடிபட்ட படகில் ஐஸ் மற்றும் ஹெரோயின்
வடக்குக் கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பொறுப்பேற்கப்பட்ட படகில் 'ஐஸ்' அத்தோடு ஹெரோயின் போதைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின், நிபுணத்துவப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்த இச்சோதனைகளின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சுமார் 81kg எடையுள்ள போதைப்பொருட்கள் தொகுதி காணப்படுவதாகக் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று 27 ஆம் திகதி அதிகாலையில் யாழ்ப்பாணம் மாதகல், குசுமந்துறை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போதே இப்போதைப்பொருட்களுடன் கூடிய இப் படகைக் கடற்படையினர் பொறுப்பேற்றனர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் படகொன்றும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட பிரிவுகளும், இலங்கை கடற்படைக் கப்பல் அக்போ நிறுவனத்தின் அதிகாரிகளும் இணைந்து இன்று இச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருட்கள் தொகுதி தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now