New Updates! Fresh news just arrived.

பாராளுமன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனை: அறிக்கை சமர்ப்பிக்க...

News

பாராளுமன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனை: அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் பணிப்பு!

February 5, 2026 1:56 pm
பாராளுமன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனை: அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் பணிப்பு!
ஐஸ், போதைப்பொருளை பாராளுமன்ற சேவையாளர்கள் பாவிப்பதாகவும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை முன்னெடுக்க சபாநாயகர் பணிப்பு என்று வெளியான செய்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அறிவுறுத்தினார்

பாராளுமன்றம் வியாழக்கிழமை (05) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியதையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போதே குறித்த அறிவுறுத்தலை விடுத்தார்.

2026.01. 11 ஆம் திகதியன்று வெளியான சிங்கள பத்திரிகை ஒன்று 'பாராளுமன்ற சேவையாளர்கள் ஐஸ், போதைப்பொருள் பாவனை. கடும் நடவடிக்கையை முன்னெடுக்க சபாநாயகர் பணிப்பு' என்று தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியானது பாராளுமன்ற தத்துவங்கள் மற்றும் சிறப்புரிமைக்கு முற்றிலும் விரோதமானது.

பாராளுமன்ற சேவையாளர்கள் குறித்து போலியான செய்திகளை வெளியிடும் போது பாராளுமன்ற கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பது கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே இந்த செய்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு அறிவுறுத்துகிறேன் என்றார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now