New Updates! Fresh news just arrived.

விபத்தில் சிக்கிய இருவரிடம் ஐஸ் போதைப்பொருள் மீட்பு! - Gu...

News

விபத்தில் சிக்கிய இருவரிடம் ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

September 7, 2026 8:18 am
விபத்தில் சிக்கிய இருவரிடம் ஐஸ் போதைப்பொருள் மீட்பு!
கொட்டதெனியாவ தொரொவ்வ பகுதியில் பேருந்தொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, இருவரிடம் இருந்து பெருமளவு ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரும், அவருடன் பின்னால் பயணித்த மற்றுமொருவரும் காயமடைந்துள்ளனர். இருவரும் முதற்கட்ட சிகிச்சைக்காக தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களுடன் இருந்த பயணப் பொதிகளை பொலிஸார் சோதனை செய்துள்ளனர். அந்தச் சோதனையில் 350 கிராம் ஐஸ் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் பொலிஸ் பாதுகாப்புடன் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 21 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டதெனியாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now