'ஐஸ்' போதைப்பொருள் கடத்தல்: சாரதி மற்றும் நடத்த...
News
'ஐஸ்' போதைப்பொருள் கடத்தல்: சாரதி மற்றும் நடத்துனர் கைது!
அம்பாறை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து கேத்சிரிகம நோக்கி. பயணித்த பேருந்து ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 'ஐஸ்' போதைப்பொருளுடன், குறித்த பேருந்தின் சாரதியும் நடத்துனரும் அம்பாறை ஊழல் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சி அவர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை அம்பாறை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட குறித்த பேருந்தானது, அம்பாறை நகரின் மையப்பகுதியில் வைத்துப் பொலிஸாரினால் இடைமறிக்கப்பட்டதோடு, பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டதற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டிருந்த தீவிர சோதனையின் போது நடத்துனரிடமிருந்து 5050 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், சாரதியின் இருக்கைக்கு அருகில், முன்பக்க டாஷ்போர்டுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 2050 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சாரதியே குறித்த பேருந்தினுடைய உரிமையாளர் என்பது தெரியவந்துள்ளதுடன், இவர் நீண்டகாலமாக கேத்சிரிகம பகுதியில் குறித்த கடத்தல்களில் ஈடுபட்டுவந்துள்ளதுடன், ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகச் சிறைவாசம் அனுபவித்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களில் சந்தேகத்திற்குரிய சாரதி கொக்னஹர பகுதியைச் சேர்ந்தவர் என்றும், நடத்துனர் பஹலந்த பகுதியினை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தோடு, பொலிஸாரினால் பேருந்து கைப்பற்றப்பட்டதால் பயணிகள் மாற்று வாகனங்களில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுச் சிரமங்களை எதிர்கொண்டதோடு, சம்பவம் நடந்த உடனேயே குறித்த பேருந்தினுடைய போக்குவரத்து உரிமத்தினை கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து சேவை இரத்து செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பேருந்தும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.