இலங்கை - கேரளா இடையே வர்த்தக உறவுகளை வலுப்படுத்த புரிந்து...
News
இலங்கை - கேரளா இடையே வர்த்தக உறவுகளை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வணிக உறவுகளினை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தியாவினுடைய கொச்சின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபையினுடைய பிரதிநிதிகள் குழுவினர் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும், பரந்த பிராந்திய அணுகுமுறைகள் ஊடாக வணிக உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இச்சந்திப்பின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இவ்விஜயத்திற்கு இணையான வகையில், இலங்கைக்கும் கேரளாவுக்கும் இடையில் நிறுவன ரீதியிலான ஒத்துழைப்பு மற்றும் வணிக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், கொச்சின் வர்த்தக சபைக்கும் இலங்கை வர்த்தக சபைக்கும் (The Ceylon Chamber of Commerce) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு வழிகளை விரிவுபடுத்துவதற்கான மற்றொரு முக்கிய மைல்கல்லாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகின்றது.