இலங்கை பொருளாதார மீட்சியில் முழுமையடையவில்லை: உலக வங்கி! ...
News
இலங்கை பொருளாதார மீட்சியில் முழுமையடையவில்லை: உலக வங்கி!
இலங்கையினுடைய பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியதன் ஊடாக ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்துள்ளதாக உலக வங்கி குழுமமானது அறிவித்துள்ளது.
உலக வங்கி குழுமமானது வெளியிட்டுள்ள தனது அரையாண்டு பொருளாதாரக் கண்ணோட்டத்தின் அறிக்கையில் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
இருந்தபோதிலும், பரந்த பொருளாதார மீட்சியோடு, ஒப்பிடுகையில் குடும்ப வருமானங்கள் மற்றும் தொழிலாளர் சந்தை முடிவுகள் இன்னும் பின்தங்கியே காணப்படுவதினால், குறித்த பொருளாதார மீட்சியானது முழுமையற்றதாகவும், சீரற்றதாகவும் உள்ளதாக குறித்த அறிக்கையில் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
தொழில்துறையினிடைய வலுவான செயல்திறன் மற்றும் சேவைத்துறையின் சீரான வளர்ச்சி காரணமாக, இலங்கையினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இவ் ஆண்டில் 4.4 சதவீதத்தினால் வளர்ச்சியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது
மேலும், பேரண்ட பொருளாதார மீட்சி ஏற்பட்டுள்ள போதிலும், பொருளாதார நெருக்கடியானது இழந்த வாழ்க்கைத்தரத்தினை பல குடும்பங்கள் இன்னும் மீளப் பெறவில்லை எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வறுமை விகிதம் சுமார் 14 சதவீதமாகக் குறையும் எனக் கணிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அது நெருக்கடிக்கு முந்தைய மட்டத்தினை விட உயர்வாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, முதன்மை பணவீக்கமானது 2026 ஆம் ஆண்டில் 5.7 சதவீதமாக ஆண்டுக்கு ஆண்டு உயர்மட்டத்தில் காணப்படும் எனவும், பின்னர் 2028 ஆம் ஆண்டளவில் 5.0 சதவீத பணவீக்க இலக்கை நோக்கிப் படிப்படியாகக் குறைவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
2026 ஆம் ஆண்டில், உயர் எரிசக்தி விலைகள் மற்றும் பலவீனமானது ரூபாயின் தாக்கம் பொருளாதாரத்தில் தொடர்ந்து நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் உலக வங்கி குழுமமானது குறிப்பிட்டுள்ளது.