New Updates! Fresh news just arrived.

இலங்கை விரும்பும் பொருத்தமான எந்தவொரு வழியிலும் ஆதரவளிக்க...

News

இலங்கை விரும்பும் பொருத்தமான எந்தவொரு வழியிலும் ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் உறுதி!

October 15, 2026 4:51 pm
இலங்கை விரும்பும் பொருத்தமான எந்தவொரு வழியிலும் ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் உறுதி!
இலங்கை விரும்பும் பொருத்தமான எந்தவொரு வழியிலும் ஆதரவளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராகவுள்ளதாக அதன் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தினுடைய துணைப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தெரிவித்துள்ளார்.

பெங்கொக்கில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியக் கூட்டத்தினுடைய போது ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜெயின்-சந்திரா, இலங்கையினுடைய பேரண்ட பொருளாதாரச் சூழல் (Macroeconomic situation) "பெருமளவில் மேம்பட்டுள்ளது" எனவும், அதன் நிதிச் செயல்திறன் மிகவும் வலுவாக உள்ளதோடு, கடன் மறுசீரமைப்புப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஆளுகை உள்ளிட்ட கட்டமைப்பு சார்ந்த முக்கியமான விடயங்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியமானது தனது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (Extended Fund Facility) கீழ் ஏழாவது மீளாய்வில் இலங்கையோடு, ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டியது. இது சுமார் 345 மில்லியன் டொலர் நிதியுதவியினை வழங்குவதற்கு வழிவகுக்கும்.

குறித்த மீளாய்வு நிறைவடைந்ததும், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தினுடைய சிறப்பு வரைபட உரிமைகளுக்கு (Special Drawing Rights) சமமான சுமார் 345 மில்லியன் டொலர்களினை பெறக்கூடியதாக இருக்கும்.

வரவிருக்கும் வாரங்களில் குறித்த உடன்படிக்கை சர்வதேச நாணய நிதியத்தினுடைய நிர்வாகக் குழுவால் பரிசீலிக்கப்படும் எனவும், மார்ச் மாதத்தில் இந்தத் திட்டம் முடிவடைவதற்கு முன்பு மற்றொரு மீளாய்வுக் குழுவினுடைய விஜயம் இடம்பெறும் என்றும் ஜெயின்-சந்திரா தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கைக்கு அப்பால், புதிய நிதி ஏற்பாடு மற்றும் கண்காணிப்பு அல்லது திறன் மேம்பாடு வடிவிலான கொள்கை ஆலோசனைகளுட்பட இலங்கை அதிகாரிகளோடு சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து இணைந்து செயல்படும் எனவும் ஜெயின்-சந்திரா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now