சட்டவிரோத நட்டஈட்டை பெற்றுக்கொண்ட விவகாரம்: முன்னாள் ஜனாத...
News
சட்டவிரோத நட்டஈட்டை பெற்றுக்கொண்ட விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய உள்ளிட்டோருக்கு அழைப்பாணை!
2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற அரகலய மக்கள் போராட்டத்தின் மீதான தாக்குதலிற்கு பின்னர் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போது, தமது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கூறி சட்டத்திற்கு முரணான வகையில் பெற்றுக்கொள்ளப்பட்ட நட்டஈட்டுத் தொகையினை முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் மீண்டும் அறவிடுமாறு உத்தரவிடக் கோரி அடிப்படை உரிமை மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, குறித்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு இவ்வழக்கு தொடர்பிலான அறிவித்தல்களினை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு அறிவித்துள்ளது.
இதன்படி, குறித்த மனுவினுடைய பிரதிவாதிகளினால் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபரான சி.டி. விக்கிரமரத்ன, முன்னாள் கடற்படைத் தளபதயான நிஷாந்த உலுகேதென்ன மற்றும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டிரான் அலஸ் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினுடைய முன்னாள் செயலாளரான ஜகத் அல்விஸ் ஆகியோருக்கு அறிவித்தல்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்குப் பிறப்பித்த குறித்த உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.