New Updates! Fresh news just arrived.

சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு: எவ்வித நிபந்தனையுமின்றி சுற...

News

சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு: எவ்வித நிபந்தனையுமின்றி சுற்றிவளைக்க பொலிஸாருக்கு உத்தரவு!

March 26, 2026 9:26 pm
சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு: எவ்வித நிபந்தனையுமின்றி சுற்றிவளைக்க பொலிஸாருக்கு உத்தரவு!
சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்துள்ள இடங்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகச் சுற்றிவளைத்து சோதனையிடுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திம்பிரிகஸ்யாய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல, இந்த விசேட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

எரிபொருளைத் தேக்கி வைக்கும் இடங்கள் மற்றும் சட்டவிரோத விற்பனை நிலையங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிசார் பணிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனப் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி முதல் அனைவரும் எரிபொருள் சிக்கனத்தில் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருவதாகவும், அதனைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now