New Updates! Fresh news just arrived.

சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு: மூவர் கைது – ஆயிரக்கணக்கான ...

News

சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு: மூவர் கைது – ஆயிரக்கணக்கான லீற்றர் டீசல், மண்ணெண்ணெய் பறிமுதல்

March 27, 2026 10:07 am
சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு: மூவர் கைது – ஆயிரக்கணக்கான லீற்றர் டீசல், மண்ணெண்ணெய் பறிமுதல்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (26) நீர்கொழும்பு, புதுக்குடியிருப்பு மற்றும் ஹிங்குராக்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அனுமதிப்பத்திரமின்றி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு கலப்பு பகுதியில் மீன்பிடி படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,050 லீற்றர் டீசல் சேமித்து வைத்த 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு , சுதந்திரபுரம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், சட்டவிரோதமாக சேமித்த வைக்கப்பட்டிருந்த 562 லீற்றர் டீசலுடன் 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்தோடு, ஹிங்குராக்கொட - 'யாய 07' பகுதியில் முன்னெடுக்கப்பட்ட முற்றுகையின் போது, சட்டவிரோதமாகச் சேமிக்கப்பட்டிருந்த 1,995 லீற்றர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டதுடன், 36 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட எரிபொருள் தொகுதிகள் தொடர்பாக அந்தந்தப் பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now