சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் கைது - ப...
News
சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் கைது - பொலிஸார் தீவிர சோதனை
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கனை துவரை ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர் நேற்றையதினம் (04) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுர பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கசிப்பு உற்பத்திக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 1800 லீற்றர் கோடா பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் இன்று(05) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்