வரிப்பத்தான்சேனை பெரியபாலம் ஒளியூட்டல்: நீண்டகால கோரிக்க...
News
வரிப்பத்தான்சேனை பெரியபாலம் ஒளியூட்டல்: நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு!
வரிப்பத்தான்சேனை பகுதியில் அமைந்துள்ள இறக்காமம் பிரதேச சபையின் நுழைவாயிலாக விளங்கும் பெரியபாலம் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த ஒளியூட்டல் குறைபாடு தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சின் “நகரங்களை அழகுபடுத்தல்” திட்டத்தின் கீழ் இந்த ஒளியூட்டல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இறக்காமம் பிரதேச சபை தலைவர் கௌரவ எம்.எல்.எம். முஸ்மி அவர்களினுடைய வழிகாட்டலில், முன்னாள் உதவி தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான என்.எம். ஆஷீக் மற்றும் உறுப்பினரான ஏ.ஜி.எம். சாக்கீர் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் குறித்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவி செய்த உதவி தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சபை செயலாளர், ஊழியர்கள் அனைவருக்கும் வரிப்பத்தான்சேனை பிரதேச மக்களின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் ஊடாக, இரவு நேரங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பும், பகுதியினுடைய அழகும் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நூருல் ஹுதா உமர்