New Updates! Fresh news just arrived.

இலங்கை பொருளாதார மீட்சிக்கு IMF பாராட்டு – ஜனாதிபதி அளித்...

News

இலங்கை பொருளாதார மீட்சிக்கு IMF பாராட்டு – ஜனாதிபதி அளித்த முக்கிய உறுதி

July 1, 2026 9:49 am
இலங்கை பொருளாதார மீட்சிக்கு IMF பாராட்டு – ஜனாதிபதி அளித்த முக்கிய உறுதி
பலதரப்பட்ட வெளிப்புற சவால்களுக்கு மத்தியிலும், மெக்ரோ-பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) வேலைத்திட்டத்தின் கீழ் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் (IMF) பாராட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சோனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, ஜூன் 24 முதல் 30 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதிநிதிகள் குழு, IMF ஆதரவைப் பெறும் பல நாடுகளை விட இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையின் எதிர்கால பொருளாதார நடவடிக்கைகளுக்கும் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கை அடைந்துள்ள பொருளாதார மீட்சி மற்றும் நாட்டின் மீண்டெழும் திறன் ஆகியவற்றை IMF பிரதிநிதிகள் உயர்வாக மதிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள EFF வேலைத்திட்டத்தின் ஏழாவது மதிப்பாய்வின் போது, இலங்கையின் முன்னேற்றம் அதிகாரப்பூர்வமாக மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் பலன்களை நாட்டின் மக்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்ப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என வலியுறுத்தினார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now