New Updates! Fresh news just arrived.

பணியின் போது ஒழுக்கீனம்: போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரி பண...

News

பணியின் போது ஒழுக்கீனம்: போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரி பணியிடை நீக்கம்!

April 5, 2026 12:40 am
பணியின் போது ஒழுக்கீனம்: போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரி பணியிடை நீக்கம்!
கிளிநொச்சியில் பணியின் போது உரிய நடைமுறைகளை மீறிச் செயல்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரி ஒருவர், கடந்த 01.04.2026 அன்று மாலை முதல் உடனடியாகப் நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

சோதனை நடவடிக்கை:
கடந்த ஏப்ரல் 1-ஆம் திகதி காலை, பராந்தன் சந்திப்புப் பகுதியில் கிளிநொச்சி 01 உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருமான அங்கம்மன அவர்கள் நேரடிச் சோதனையில் ஈடுபட்ட நிலையில், கிளிநொச்சி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

பணம் மீட்பு:
குறித்த திடீர் சோதனையின் போது, குறித்த அதிகாரியின் பணி இடத்திற்கு அருகாமையில் வீதியில் விழுந்து கிடந்த நிலையில் 1,000/= ரூபாவும், அவரது பணப்பையில் (Wallet) இருந்த 900/= ரூபா மற்றும் அவரது தலைக்கவசத்தினுள் (P-Cap) மறைத்து வைக்கப்பட்டிருந்த 7,000/= ரூபா ஆகியவற்றை உயர் அதிகாரி கண்டெடுத்தார்.

இதன்படி, நீதிமன்ற நடவடிக்கை மற்றும் இடைநிறுத்தம்:
கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் முறையே PR 1489/26, 1490/26, 1491/26 ஆகிய பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

காவல்துறை ஒழுக்க விதிகளை மீறிச் செயல்பட்டமைக்காகவும், சந்தேகத்திற்குரிய பணத்தை வைத்திருந்தமைக்காகவும் குறித்த பொலிஸ் அதிகாரி, 01.04.2026 அன்று மாலை 18:00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now