பால்மா உள்ளிட்ட பொருட்கள் தொடர்பில் அதிகாரசபை முக்கிய அறி...
News
பால்மா உள்ளிட்ட பொருட்கள் தொடர்பில் அதிகாரசபை முக்கிய அறிவிப்பு!
பால்மா, பால், யோகட் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் தகவல்களில் உண்மை இல்லை என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
‘BREAKING NEWS’ என்ற குறிப்புடன் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் குறித்த தகவல் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
குறித்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலை அதிகரிப்பு தொடர்பான தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை எனத் தெரிவித்துள்ள அதிகாரசபை, அவற்றை சரிபார்க்காமல் மற்றவர்களுடன் பகிர்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறான போலியான தகவல்கள் பரவுவதால் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற குழப்பமும் அச்சமும் ஏற்படுவதுடன், சந்தை நிலவரம் தொடர்பிலும் தவறான புரிதல்கள் உருவாகக்கூடும் என அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, பொருட்களின் விலை தொடர்பில் சந்தேகத்திற்கிடமான மாற்றங்கள் அல்லது ஏதேனும் சந்தை முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால், 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.