New Updates! Fresh news just arrived.

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் முக்கிய...

News

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

June 16, 2026 7:31 pm
நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து, நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்கு வைத்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சு விசேட சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதன்படி, நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் இந்த விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

கல்வி நிறுவனங்களில் கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அழித்தல், வளாகங்களைத் துப்புரவாக்குதல் மற்றும் சமூக பங்களிப்புடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு பரவலைத் தடுக்கும் தேசிய முயற்சிக்கு கல்வித் துறையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now