மீனவர்கள், கடற்படை சமூகத்தினருக்கு முக்கிய அறிவிப்பு! - G...
News
மீனவர்கள், கடற்படை சமூகத்தினருக்கு முக்கிய அறிவிப்பு!
வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில நாட்களில் வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வங்காள விரிகுடா மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரித்து, கடல் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும். எனவே, மீனவர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50–60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். புத்தளம் முதல் கங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளிலும் மணிக்கு 50 கி.மீ. வரை காற்று வீசக்கூடும்.
மேலும், புத்தளம் முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.