க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
News

அனர்த்ததின் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையினுடைய எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகளானது, எதிர்வரும் 12 ஆம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சைகள் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரைக்கும் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில், பரீட்சை பணிகளை ஒருங்கிணைக்க 325 இணைப்பு நிலையங்கள் செயற்படும்.
மேலும், விடைத்தாள்களினை சேகரிப்பதற்காக 32 பிராந்திய சேகரிப்பு நிலையங்களானது இயங்கும் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.