New Updates! Fresh news just arrived.

சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்...

News

சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

September 15, 2026 11:38 pm
சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் நிலவும் சூழலைக் கருத்திற் கொண்டு, அங்குள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அவசர எச்சரிக்கை சமிக்ஞைகள் பெறப்படும்போது கட்டடங்களுக்குள் ஜன்னல்கள், கண்ணாடிகளிலிருந்து விலகி இருக்கவும்.

வெளியில் இருந்தால் அருகில் உள்ள உறுதியான கட்டடத்தில் தஞ்சமடையவும். மக்கள் கூடும் இடங்களைத் தவிர்க்கவும். வாகனங்களை ஓரமாக நிறுத்தவும்.

நிகழ்வுகளைப் படம் பிடிப்பதையோ, சமூக வலைதளங்களில் பகிர்வதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும்.
அவசர எண்கள்:
* மக்கா, மதினா: 911
* ஏனைய பகுதிகள்: 998
* இலங்கைத் தூதரகம்: 056 098 6671
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now