பேக்கரி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான முக்கிய அறிவ...
News
பேக்கரி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
நாட்டில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையை குறைத்துள்ள போதிலும், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் பலனாக சில உணவகங்களில் விற்கப்படும் பிரைட் ரைஸ், கொத்து, பரோட்டா மற்றும் சிற்றுண்டி வகைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
எனினும், பாண், பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை தற்போது குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை குறைப்பு மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதால், அது பேக்கரி உற்பத்திச் செலவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே, தற்போதைக்கு பேக்கரி பொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என அவர் விளக்கமளித்துள்ளார்.