New Updates! Fresh news just arrived.

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்க...

News

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

March 12, 2026 10:39 am
பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
புத்தல பகுதியில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மரதன் பயிற்சி ஓட்டத்தின் போது 15 வயதுடைய மாணவன் ஒருவன் திடீரென உயிரிழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைத் தொடர்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் விளையாட்டுதுறைசார் மருத்துவர் ருவன் ஜயசூரிய, இந்த முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்

அதன்படி, எந்தவொரு விளையாட்டுப் போட்டியிலும் பங்கேற்பதற்கு முன்னதாக, மாணவர்கள் தங்களின் உடல் தகுதியை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

போட்டி நடைபெறுவதற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவேனும் முறையான மருத்துவ சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கல்வி அமைச்சு ஏற்கனவே வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்களின் நலனுக்காக நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் இந்த மருத்துவர்களிடம் சென்று அடிப்படை பரிசோதனைகளை மேற்கொண்டு, தாங்கள் விளையாட்டுக்கு தகுதியானவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏதேனும் உடல்நலச் சிக்கல்கள் கண்டறியப்பட்டால், குறித்த வைத்தியர்கள் மாணவர்களை நிபுணத்துவ மருத்துவர்களிடம் மேலதிக சிகிச்சைக்காக பரிந்துரைப்பார்கள்.

தற்போது நாட்டில் நிலவும் அதிகப்படியான வெப்பமான காலநிலை குறித்து மாணவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.

கடும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க சில ஆலோசனைகளை அவர் வழங்கியுள்ளார்.

அதற்கமைய, விளையாட்டுப் பயிற்சிகளை அதிகாலை வேளையிலோ அல்லது மாலை 4 மணிக்குப் பின்னர் வெயில் தணிந்த பின்னரோ மேற்கொள்ள வேண்டும்.

நண்பகல் வேளையில் வெயிலில் விளையாடுவதை அல்லது பயிற்சிகளில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

கடும் வெயிலில் பயிற்சிகளை மேற்கொள்வது 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் உயிருக்கு ஆபத்தான வெப்பத்தாக்க நிலையை ஏற்படுத்தக்கூடும்.

திறந்தவெளியில் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது மாணவர்கள் போதுமான அளவு நீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.

உயிரிழப்புகளைத் தவிர்க்கவும், ஆரோக்கியமான முறையில் விளையாட்டுத் துறையில் ஈடுபடவும் இந்த பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுவது மிக அவசியமாகும் என மருத்துவர் ருவன் ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now