கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு...
News
கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை கணினி முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது.
செயலிழந்த கணினி அமைப்பு தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.
கணினி முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இன்று காலை வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை வழங்கும் ஒருநாள் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதுடன், சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதமும் இதேபோன்று கணினி முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஒருநாள் சேவை உள்ளிட்ட திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.