பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களு...
News
பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
025ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கு விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் இந்த மாதம் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகின.
குறித்த விண்ணப்பங்களை பல்கலைக்கழகப் பிரவேசக் கையேட்டினை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், அதன் மென் பிரதியினை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகத் தரவிறக்கம் செய்துகொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு 176,527 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.