New Updates! Fresh news just arrived.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 2...

News

தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில்

November 21, 2026 11:56 am
தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில்
சக மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதுடன், வெட்டுக் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்கள் ஐவர் மீது நேற்று முன்தினம் (19) இரவு சக மாணவர்கள் சிலர் இணைந்து மூர்க்கமாகத் தாக்குதல் நடத்தியதுடன், பிளேட்டினால் (Blade) வெட்டுக் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து காயமடைந்த ஐந்து மாணவர்களும் நேற்று முன்தினம் இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விரைந்து செயற்பட்ட பொலிஸார் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவரையும், பொது இடத்தில் கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 20 பேரையும் என மொத்தமாக 21 மாணவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் சந்தேகநபர்களான 21 மாணவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை குழு மோதலில் ஈடுபட்ட ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now