New Updates! Fresh news just arrived.

ட்ரம்ப்பின் நிலைப்பாட்டிற்கு மாறாக அமெரிக்க மத்திய வங்கி ...

News

ட்ரம்ப்பின் நிலைப்பாட்டிற்கு மாறாக அமெரிக்க மத்திய வங்கி முடிவு

July 30, 2026 12:45 pm
ட்ரம்ப்பின் நிலைப்பாட்டிற்கு மாறாக அமெரிக்க மத்திய வங்கி முடிவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவசரமாக வட்டி விகிதக் குறைப்புகளை எதிர்பார்த்த போதிலும், அதற்கு எதிர்மாறான முடிவையே அந்த நாட்டு மத்திய வங்கி எடுத்துள்ளது.

அதற்கமைய, அமெரிக்க மத்திய வங்கி தமது கொள்கை வட்டி விகிதங்களை 3.75% வரையிலான வரம்பில் மாற்றமின்றி நிலையாக பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, புதிய மத்திய வங்கியின் ஆளுநரின் இந்த தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி கருத்துக்களை வௌியிடவில்லை.

அவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, வோர்ஷ் ஒரு புத்திசாலி மனிதர். குறைந்த வட்டி விகிதங்களைக் காண்பதை அவர் விரும்புவார் என்பதை நான் அறிவேன், ஆனால் அவரிடம் ஒரு குழு உள்ளது.

அது ஒரு அரசியல் குழு, அவர்கள் வட்டி விகிதங்களை உயர்வாக வைத்திருப்பதற்கே விரும்புகிறார்கள். ஆனால் நாங்கள் வட்டி விகிதங்களை எதிர்த்து போராடுகிறோம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்ற மத்திய வங்கியின் முடிவைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வோர்ஷ், வலுவான வேலைவாய்ப்புச் சந்தை மற்றும் பொருளாதாரத்துடன் இணைந்து தற்போது அதிகரித்து வரும் பணவீக்கத்திற்குச் இணையாக, வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கே தாம் எண்ணுவதாக தெரிவித்தார்.

தொழிலாளர் சந்தை ஏறக்குறைய சமநிலையில் இருக்கும் இடத்தில் உள்ள ஒரு மத்திய வங்கித் தலைவர், அடிப்படைப் பணவீக்கம் உயர்வதைக் காணும்போது, பணக் கொள்கையை இறுக்கமாக்கவே அதிகம் விரும்புவார்.

அதேபோல், உங்கள் இலக்கின் மறுபக்கத்தை நீங்கள் அடைந்து, அடிப்படைப் பணவீக்கம் குறைவதைக் காணும்போது, கொள்கையைத் தளர்த்தவே அவர் விரும்புவார், என்று கூறினார். அதுவே தனது செயல்பாட்டுப் பாணி எனவும் குறிப்பிட்டார்.

ட்ரம்ப் தாம் முன்வைத்த வட்டி விகிதங்களை அதிரடியாகக் குறைக்கவில்லை என்பதற்காக தொடர்ச்சியாக விமர்சித்த நிலையில் ஜெரோம் பவல் பதவி விலகினார்.

அதனை அடுத்து கடந்த மே மாதம் வோர்ஷ் பொறுப்பேற்றதிலிருந்து எடுக்கப்பட்ட மத்திய வங்கியின் இரண்டாவது கொள்கை தீர்மானம் இதுவாகும்.

இவ்விரு சந்தர்ப்பங்களிலும், மத்திய வங்கி வட்டி விகிதங்களை 3.50% முதல் 3.75% வரையிலான வரம்பில் மாற்றமின்றி ஸ்திரமாக ​பேணப்பட்டுள்ளது.

எனினும், அடுத்த முறை அங்கு வட்டி விகித உயர்வுக்கான சாத்தியக்கூறு 60% க்கும் அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now