New Updates! Fresh news just arrived.

குளிர் காலநிலை காரணமாக காசா பகுதியில் குழந்தைகளின் இறப்பு...

News

குளிர் காலநிலை காரணமாக காசா பகுதியில் குழந்தைகளின் இறப்பு அதிகரிப்பு!

February 1, 2026 8:06 pm
குளிர் காலநிலை காரணமாக காசா பகுதியில் குழந்தைகளின் இறப்பு அதிகரிப்பு!
தற்போதைய குளிர் காலநிலையின் காரணமாக காசா பகுதியில் குழந்தைகளின் இறப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பானது தெரிவித்துள்ளதுடன், இது ஒரு மனிதாபிமான நெருக்கடியைக் குறிக்கின்றது.

குளிர் காலநிலை தொடங்கியதில் இருந்து 10 குழந்தைகள் கடுமையான குளிரால் இறந்துள்ளதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டுவதுடன், இது நாட்டின் மனிதாபிமான சூழ்நிலையில் கடுமையான சரிவினை பிரதிபலிப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், தற்காலிக தடுப்பு மையங்களில் தங்கியுள்ள மற்றும் குளிரை தாங்கக்கூடிய தங்குமிடங்கள் இல்லாத குடும்பங்களினுடைய குழந்தைகள் இந்த வழியில் இறக்கும் அபாயத்திலிருப்பதாக கூறப்படுகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now