New Updates! Fresh news just arrived.

நஷ்டஈட்டுத் தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு

News

நஷ்டஈட்டுத் தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு

September 10, 2026 11:45 pm
நஷ்டஈட்டுத் தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு
வெளிநாடுகளில் வெளிநாட்டு வேளைவாய்ப்பின் போது உயிரிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும், மரண நஷ்டஈட்டுத் தொகையை சுமார் 20 இலட்சம் ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது வெளிநாட்டுப் பணியாளர்களுக்காக மாத்திரம் வழங்க முடிந்த மிகப்பெரிய நிவாரணமென்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது வெளிநாடுகளில் உயிரிழந்த சுமார் 50 புலம்பெயர் தொழிலாளர்களின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடாக 7 கோடி ரூபாயை வழங்கும்
நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது வெளிநாட்டில் உயிரிழக்கும் ஒருவருக்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் 6 இலட்சம் ரூபா தொகையே வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தொகை போதுமானதாக இல்லாதமையால், அதனை இருபது இலட்சம் ரூபாய் வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

வருடாந்தம் வெளிநாடு செல்லும் பணியாளர்களில் ஏதேனும் துரதிர்ஷ்டவசமான காரணங்களால் அவர்களில் சுமார் 250 பேர் வரை வருடம் தோறும் உயிரையிழக்கின்றனர்.

மேலும் இந்நிலையைக் குறைப்பதற்குத் திட்டங்களுடன் கூடிய முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தவும் ஆரம்பித்துள்ளதாக விஜித ஹேரத்
தெரிவித்துள்ளார்.

"வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்கள் வருடந்தோறும் இந்நாட்டுக்கு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை பணவனுப்பல்களாக (Remittances) வழங்குகின்றனர். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்காக மிகப்பெரிய அளவிலான நலன்புரி வசதிகளைப் பணியகம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருவதைப் போல, நாங்கள் மேலும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதில் ஒரு திட்டம்தான் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வீடமைப்புக்கடனாக வங்கிகள் மூலம் கிட்டத்தட்ட 10 மில்லியன் ரூபா தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாகும். குறைந்த வட்டியில் இந்தக் கடன் வழங்கப்படுவதோடு, பணியகமும் அந்த வட்டியில் ஒரு பகுதியைச் செலுத்த நடவடிக்கை எடுக்கின்றது. அதேபோல பாடசாலை மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்கள் அத்துடன் வருடாந்த புலமைப்பரிசில் கொடுப்பனவு போன்ற நலன்புரி வசதிகளைப் பணியகம் ஏற்கனவே பணியாளர்களுக்காக வழங்கி வருகின்றது." என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now