New Updates! Fresh news just arrived.

பால் தேநீரின் விலை அதிகரிப்பு!

News

பால் தேநீரின் விலை அதிகரிப்பு!

May 20, 2026 7:45 pm
பால் தேநீரின் விலை அதிகரிப்பு!
இன்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவினுடைய விலைகளினை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கமானது அறிவித்துள்ளது.

இதன்படி, 400 கிராம் பால்மா பெக்கெட்டின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால்மா பக்கெட்டின் விலை 125 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சந்தை நிலைமைகள் மற்றும் நாணய மாற்று வீத நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு பால்மா பெக்கெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

அத்தோடு, அடுத்த வாரத்திற்குள் குறித்த புதிய விலைகளின் கீழ் சந்தைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாக்கள் விநியோகிக்கப்படும் எனவும், தற்போது சந்தையில் உள்ள எந்தவொரு இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையும் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now