அரச நிறைவேற்றுதர அலுவலர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு ...
News
அரச நிறைவேற்றுதர அலுவலர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிப்பு!
அரச சேவை நிறைவேற்றுதர அலுவலர்களுக்கான போக்குவரத்துக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு 2027 வரவு செலவு திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொது நிர்வாக சுற்றறிக்கை இல. 05/2016 இன் கீழ் உத்தியோகபூர்வ வாகனமொன்றுக்கு உரித்துடைய, ஆனால் உத்தியோகபூர்வ கடமையை நிறைவேற்றுவதற்குத் தங்களது சொந்த வாகனங்களைப் பயன்படுத்தும் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களுக்கு, தற்போது மாதாந்தம் 50,000 ரூபாய் போக்குவரத்துக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
தனிப்பட்ட வாகனங்களை உத்தியோகபூர்வ கடமைகளுக்குப் பயன்படுத்தும் போது பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் ஏனைய செயற்பாட்டுச் செலவுகளின் அதிகரிப்பைக் கவனத்திற் கொண்டு, வாகனம் உரித்துடைய அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் பார்க்க அவர்கள் தனிப்பட்ட வாகனமொன்றைப் பயன்படுத்துவது அரசாங்கத்திற்கு மிகவும் நிதி ரீதியான விளைபயன் அதிகமாக இருப்பதால் அதனை ஊக்குவிப்பதன் பயனாக தற்போது வழங்கப்படும் மாதாந்த போக்குவரத்துக் கொடுப்பனவை 100,000 ரூபாவாக உயர்த்துவதற்கு முன்மொழியப்படுகிறது.
முழுமையாக மின்சாரத்தின் மூலம் இயங்கும் தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனம் பெறத் தகுதியுடைய உத்தியோகத்தர்களுக்கு மின்சாரத்தின் மூலம் இயங்குகின்ற வாகனத்தைப் பயன்படுத்துவதனை ஊக்குவிக்கும் நோக்கில், பொது நிர்வாக சுற்றறிக்கை இல. 13/2008(V) இற்கு அமைவாக செலுத்தப்படுகின்ற மாதாந்தக் கொடுப்பனவை 2027 ஜூலை முதல் 150% இனால் அதிகரிப்பதற்கு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.