கடற்கரைப் பகுதிகளில் மணல் கடத்தல் அதிகரிப்பு: அதிகாரிகளிட...
News
கடற்கரைப் பகுதிகளில் மணல் கடத்தல் அதிகரிப்பு: அதிகாரிகளிடம் நடவடிக்கை கோரிக்கை!
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது முதல் நிந்தவூர் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் கடல்மண் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உரப்பைகளில் கடல்மண்ணை நிரப்பி, மோட்டார் சைக்கிள்கள் மூலம் அதிகாலை முதல் இரவு வரை எடுத்துச் செல்வதாகவும், நாளாந்தம் பெருமளவிலான மண் மூடைகள் கடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் தற்போது குறைந்துள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடல்மண் அகழ்வினால் கரையோரச் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, கடற்கரையில் வீட்டு கழிவுகள் கொட்டப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து, கரையோரப் பகுதிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.
(பாறுக் ஷஹான்)