அதிகரிக்கிறது டொலரின் பெறுமதி: நாட்டு மக்களுக்கு ஜனாதிபத...
News
அதிகரிக்கிறது டொலரின் பெறுமதி: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அவசர வேண்டுகோள்!
நாடு எதிர்கொண்டுள்ள தற்காலிக டொலர் நெருக்கடியைச் சமாளித்து, நாட்டிலிருந்து வெளியேறும் டொலர்களின் அளவைக் கட்டுப்படுத்துவதற்காக, இறக்குமதிச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள அனைவரும் தனிநபர்களாகப் பங்களிக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று (21) பிற்பகல் நடைபெற்ற, போதைப்பொருள் பேரழிவுக்கு எதிரான “முழு நாடுமே ஒன்றாக” மட்டக்களப்பு மாவட்ட விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை 29% வீழ்ச்சியடைந்துள்ளமை மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடியால் ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளமை ஆகிய காரணங்களால் டொலருக்கான அழுத்தம் அதிகரித்துள்ளது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கடந்த பெப்ரவரியில் 98 மில்லியன் டொலராக இருந்த நாட்டின் எரிபொருள் இறக்குமதிச் செலவு, இந்த மே மாதத்தில் 522 மில்லியன் டொலராக பாரியளவில் உயர்வடைந்துள்ளது.
இந்த நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) கடன் திட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த காலத்தைப் போன்றதொரு பொருளாதார முடக்கத்திற்கு நாடு செல்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என உறுதியளித்தார்.
மத்திய கிழக்கு போர்ச் சூழல் மற்றும் 'டிட்வா' சூறாவளிப் பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், வலுவான பொருளாதார நிர்வாகத்தின் காரணமாக இலங்கை வரலாற்றில் அதிகப்படியான நிதியைக் கொண்ட திறைசேரிக் கணக்கு தற்போது அரசாங்கத்திடம் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இதனாலேயே சூறாவளிப் பாதிப்புகளுக்கு 50,000 கோடி ரூபாயும், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்பு நிவாரணங்களுக்காக 10,000 கோடி ரூபாயும் ஒதுக்க முடிந்தது என்றார்.
இதன்படி, பொதுமக்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் அரசாங்கம் 100 ரூபாய் நிவாரணத்தை தற்போதும் வழங்கி வருவதுடன், 95% சாதாரண நுகர்வோருக்கான மின்சாரக் கட்டண நிவாரணம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.