உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறிய இந்தியா
News

பெண்களுக்கான 10 ஆவது 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த போட்டித்தொடரில் இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. குழு 1 பிரிவில் லண்டன் லார்ட்சில், இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இதில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களை சேர்த்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் 56 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
171 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை எடுத்து, 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பெர்ரி 56 ஓட்டங்களையும், கார்ட்னர் 53 ஓட்டங்களை பெற்று கொண்டனர்.
இந்தத் தோல்வியால் இந்திய அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது. அதனால் மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் இருந்து இந்தியா வெளியேறியது.