இந்திய விமானப்படை விமானம் விபத்து!
News
இந்திய விமானப்படை விமானம் விபத்து!
இந்திய விமானப்படைக்கு சொந்தமான AN-32 ரக போக்குவரத்து விமானம் ஒன்று அசாமில் உள்ள ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இன்று (13) விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் ஜோர்ஹாட் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோதே இந்த விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், இது குறித்து கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விபத்துக்குள்ளான AN-32 விமானம் இந்திய விமானப்படையின் 43 வது படைப்பிரிவில் இணைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஒன்றாகும்.
இருப்பினும், விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் விமானத்தில் இருந்த பணியாளர்களின் நிலைமை குறித்தோ அல்லது அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தோ இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை.