New Updates! Fresh news just arrived.

காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்ட இந்தி...

News

காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்ட இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

June 3, 2026 6:38 pm
காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்ட இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா இன்று (03) காங்கேசன் துறைமுகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு விஜயத்தினை மேற்கொண்ட இந்திய தூதுவர் சிவகங்கை கப்பல் அதிகாரிகளுடனும், மாலுமிகளுடனும் கலந்துரையாடியதுடன் கப்பல் போக்குவரத்து தொடர்பில் பயணிகளிடமும் கருத்துக்களை கேட்டறிந்ததோடு, கப்பலையும் பார்வையிட்டார்.

குறித்த விஜயத்தின் போது இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி, கப்பல் நிறுவனத்தினுடைய இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன், கப்பல் நிறுவனத்தினுடைய அதிகாரியான பகீரதன், கப்பல் நிறுவனத்தின் இந்தியாவுக்கான சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் கப்பல் நிறுவனத்தினுடைய ஏனைய அதிகாரிகள், சுங்தத் துறையின் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now