New Updates! Fresh news just arrived.

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவ...

News

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

October 31, 2026 12:29 pm
நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!
நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 3-ம் திகதி ஒரு படகுடன் கைதான 9 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதவான், படகின் ஓட்டுநரான மீனவருக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், படகில் இருந்த ஏனைய 8 மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now