ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்
News

இன்ற (5) பிற்பகல் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பானது இன்று கொழும்பில் நடைபெற்றது.
பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் அத்துடன் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய இருதரப்புத் திட்டங்களின் மீள் ஆய்வு குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பைத் தொடர்ந்து, 'டித்வா' புயலின் பாதிப்புகளுக்குப் பின்னர் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மறுசீரமைப்புத் தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் அமெரிக்க டொலருக்கு நிகராக 'இந்திய ரூபாய் அடிப்படையிலான கடன் உதவி ஒப்பந்தங்களை இரு தரப்பும் பரிமாறிக்கொண்டன.
இக்கடன் உதவிகள் புயலுக்குப் பின்னரான மறுசீரமைப்புப் பணிகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அவசியமான கொள்முதல் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.