இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கைக்கான விஜயம் நிறைவு! ...
News
இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கைக்கான விஜயம் நிறைவு!
இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தனது பயணத்தை நிறைவு செய்து நேற்று (5) மாலை இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றார்.
இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில் அவர் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த விஜயம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்களை மீளாய்வு செய்வதற்கான முக்கிய வாய்ப்பாக அமைந்ததாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பல்துறை ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும் இந்தப் பயணம் பங்களித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பின்னர் இந்தியா அறிவித்த 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான புனரமைப்பு உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்திய ரூபாய் கடன் திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களும் பரிமாறப்பட்டன.
மேலும், இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, அரசியல் முன்னேற்றங்கள், சிறுபான்மை மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்தும் சந்திப்புகளின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.