New Updates! Fresh news just arrived.

இலங்கை வந்தடையவுள்ள இந்திய எரிபொருள் கப்பல் : வெளியான முக...

News

இலங்கை வந்தடையவுள்ள இந்திய எரிபொருள் கப்பல் : வெளியான முக்கிய அறிவிப்பு

March 27, 2026 8:39 pm
இலங்கை வந்தடையவுள்ள இந்திய எரிபொருள் கப்பல் : வெளியான முக்கிய அறிவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் இடையே தொலைபேசி ஊடாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்தியா இலங்கைக்கு 38,000 மெட்ரிக் டொன் எரிபொருளை அனுப்பியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் நாளை (28) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் வரும் இந்தச் சரக்குக் கப்பலில் 20,000 மெட்ரிக் டொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் என்பன உள்ளடங்கியுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now