New Updates! Fresh news just arrived.

இந்திய உயர்ஸ்தானிகர் - சிறீதரன் எம்.பி சந்திப்பு!

News

இந்திய உயர்ஸ்தானிகர் - சிறீதரன் எம்.பி சந்திப்பு!

August 20, 2026 8:38 pm
இந்திய உயர்ஸ்தானிகர் - சிறீதரன் எம்.பி சந்திப்பு!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

இக்கலந்துரையாடலின் போது தற்போதைய சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்துவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் அதிகாரப் பரவலாக்கலை உறுதிப்படுத்துவது தொடர்பாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உள்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் பிராந்திய அபிவிருத்தி சார்ந்த பிற முக்கிய விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

வட பிராந்தியத்தின் வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமாகத் திகழும் காங்கேசந்துறை (KKS) துறைமுக திட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அதனை மேலும் விரிவுபடுத்தி பிராந்திய தொடர்பாடலை வலுப்படுத்துவது தொடர்பாகவும் மேலும் பல விடயங்கள் சார்ந்தும் ஆரோக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now