New Updates! Fresh news just arrived.

பணவீக்கம் மீண்டும் உயர்கிறது – உணவுப் பொருட்கள் விலை கணிச...

News

பணவீக்கம் மீண்டும் உயர்கிறது – உணவுப் பொருட்கள் விலை கணிசமான அதிகரிப்பு

June 30, 2026 3:46 pm
பணவீக்கம் மீண்டும் உயர்கிறது – உணவுப் பொருட்கள் விலை கணிசமான அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, ஆண்டுக்கு ஆண்டு (Year-on-Year) கணக்கிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க வீதம் ஜூன் மாதத்தில் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த மே மாதத்தில் 5.5% ஆக காணப்பட்ட பணவீக்கம், நடப்பு ஜூன் மாதத்தில் 6.8% ஆக உயர்ந்துள்ளது.

வெளியிடப்பட்ட புதிய அறிக்கையின்படி, உணவு மற்றும் உணவு சாரா ஆகிய இரு பிரிவுகளிலும் விலை உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உணவுப் பிரிவில், மே மாதத்தில் 0.9% ஆக இருந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் கணிசமாக உயர்ந்து 3.6% ஆக பதிவாகியுள்ளது.

அதேபோல், உணவு அல்லாத பிரிவில் பணவீக்கம் 7.8% இலிருந்து 8.4% ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், நாட்டில் வாழ்க்கைச் செலவு அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளதாக பொருளாதார வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now