பேருந்தில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் உடன் அறிவியுங்கள்:...
News
பேருந்தில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் உடன் அறிவியுங்கள்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கோரிக்கை!
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தினை விட அதிகக் கட்டணம் அறவிடப்படும் பேருந்துகள் தொடர்பில் 1955 என்னும் இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கோரிக்கை யொன்றை விடுத்துள்ளது.
இது குறித்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாட்டு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல 'பண்டிகைக் காலங்களில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளினை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் இருக்கக்கூடும் எனவும், அத்தகைய பேருந்துகள் பயணிகளினை சுரண்ட வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காடினார்.
இதன்படி, அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பில் இருந்து பயணத்தினை ஆரம்பிக்கத் தயாராக இருந்த 7 பேருந்துகளினை நேற்று (11) சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பேருந்துகள் அந்த இடத்திலேயே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.