New Updates! Fresh news just arrived.

இன்ஃபுளுவென்சா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: பிரதான த...

News

இன்ஃபுளுவென்சா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

October 15, 2026 2:01 pm
இன்ஃபுளுவென்சா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
நாட்டின் னுடைய பல பகுதிகளில் தற்போது இன்ஃபுளுவென்சா நோயாளர்களினுடைய எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் பிரிவானது தெரிவித்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அதன் பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்தியர் பாலித கருணாபேம குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

"எங்களினுடைய கண்காணிப்பு அமைப்பு மூலம் கடந்த 3, 4 வாரங்களாக இன்ஃபுளுவென்சா நோயாளர்களின் அதிகரிப்பினை எம்மால் அவதானிக்க முடிகின்றது. கடந்த வாரத்தின் நிலவரப்படி பெறப்பட்ட மாதிரிகளில் சுமார் 35% ஆனோர் இன்ஃபுளுவென்சா நோயாளர்கள் என்பது தெரியவருகின்றது.

அதாவது, குறித்த காலப்பகுதியில் பரவிவருகின்ற இருமல், சளி, காய்ச்சல் போன்ற நோய்களினால் பாதிக்கப்படுவோரில் பெரும்பான்மையினருக்கு இன்ஃபுளுவென்சா தொற்று ஏற்பட்டுள்ளதினை நாம் காண்கின்றோம்.

எனினும், குறித்த நோய் நிலையானது முறையான சிகிச்சைகளுடன் 3 தொடக்கம் 4 நாட்களுக்குள் எந்வித பெரிய சிக்கலுமின்றி குணமடையக் கூடியதாகும். ஆகவே, இது தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு மற்றும் இதய நோய், சிறுநீரக நோய் போன்ற தொற்றா நோய்கலினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இன்ஃபுளுவென்சா தொற்றினால் சிலவேளைகளில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஆகவே, இது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும்." எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கருத்துத் வெளியிட்ட விசேட வைத்தியர் "இந்நோயானது இருமல் மற்றும் சளி போன்றவற்றோடு, வெளிவகும் நீர்த்துளிகள் ஊடாக பரவுகின்றது. அதுமட்டுமின்றி தொடுகை ஊடாகவும் இந்நோய் பரவக்கூடும். ஆகவே, இந்நோயைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் எப்போதும் குறிப்பிடுகின்றோம்.

அதோடு, குறித்த நோய் தாக்கியவர்கள் 2, 3 நாட்கள் வீட்டில் தங்கி ஓய்வெடுப்பது அவசியமாகும். மேலும், அடிக்கடி சவர்க்காரம் கொண்டு கைகளினை கழுவுதல் மற்றும் நோய்த் தாக்கமுள்ளவர்கள் முகக்கவசம் அணிவதன் ஊடாக நோய்ப் பரவலைத் தடுத்துக்கொள்ள முடியும்" எனவும் தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now