New Updates! Fresh news just arrived.

உலகிலிருந்து தொழில்நுட்பத்தை கொண்டுவருவதற்குப் பதிலாக, உல...

News

உலகிலிருந்து தொழில்நுட்பத்தை கொண்டுவருவதற்குப் பதிலாக, உலகிற்கே தொழில்நுட்பத்தைப் பகிர்ந்தளிக்கும் புத்தாக்க நாடாக இலங்கையை மாற்ற வேண்டும்!

September 18, 2026 11:18 pm
உலகிலிருந்து தொழில்நுட்பத்தை கொண்டுவருவதற்குப் பதிலாக, உலகிற்கே தொழில்நுட்பத்தைப் பகிர்ந்தளிக்கும் புத்தாக்க நாடாக இலங்கையை மாற்ற வேண்டும்!
உலகில் இருந்து தொழில்நுட்பக் கருவிகளினை கொண்டுவந்து அவற்றைப் பயன்படுத்தும் நாடொன்றாக இருப்பதற்குப் பதிலாக, உலகிற்கே புதிய தொழில்நுட்பத் தீர்வுகளினை வழங்கும் புத்தாக்க நாடாக இலங்கையை மாற்றுவது அரசாங்கத்தினுடைய முக்கிய இலக்காகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய விஞ்ஞான மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “விஞ்ஞானத்தைப் பிரபலப்படுத்துவதற்கான NSF விருது வழங்கும் விழா - 2026” நிகழ்வில் கலந்துகொண்டு இன்று (18) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உரையாற்றிய நிலையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

“பாதுகாப்பு மற்றும் மீளாற்றலுக்கான செயற்கை நுண்ணறிவு” (AI for Safety and Resilience) என்னும் தொனிப்பொருளில் நடைபெற்ற குறித்த விருது வழங்கும் விழாவில், விஞ்ஞானத்தினை பிரபலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக சிறப்பான பங்களிப்பினை வழங்கிய பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது மேலும் கருத்தினை தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:

“செயற்கை நுண்ணறிவு அல்லது AI தொழில்நுட்பம் என்பதானது நாம் வாழும், பணியாற்றும், தொடர்பாடும் முறைகளினையும், சவால்களுக்கு முகங்கொடுக்கும் முறையையும் வேகமாக மாற்றிக்கொண்டிருக்கும் புதிய தொழில்நுட்பமாகும். இது மனிதகுலம் எதிர்நோக்கும் மிகப் பாரிய தொழில்நுட்ப மாற்றங்களில் ஒன்றாகக் குறிப்பிட முடியும்.

செயற்கை நுண்ணறிவினை பொறுப்புடன் உருவாக்கி பயன்படுத்தும்போது, அனர்த்தங்களுக்கான முன் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு நடவடிக்கைகளினை வலுப்படுத்தவும், பொதுமக்களினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், எமது சூழலைப் பாதுகாக்கவும், தீர்மானம் எடுக்கின்ற திறனை மேம்படுத்தவும், மேலும் பாதுகாப்பானதும் மீள்திறன் கொண்டதுமான சமூகத்தினை கட்டியெழுப்பவும் பாரிய பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இருந்தபோதிலும், செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சியோடு, சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், தரவுகளினுடைய தனியுரிமை மீறப்படுதல், போலித் தகவல்கள் சமூகத்தில் பரவுதல் மற்றும் அல்கோரிதம்களால் ஏற்படக்கூடிய பாரபட்சங்கள் போன்ற பல்வேறு சவால்களுக்கும் நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

குறித்த தொழில்நுட்பம் முறையற்ற விதத்திலோ அல்லது பொறுப்பற்ற விதத்திலோ பயன்படுத்தப்பட்டால், அது ஒட்டுமொத்த சமூகத்தினுடைய ஸ்திரத்தன்மைக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும்.

ஆகவே, செயற்கை நுண்ணறிவின் பாதகமான தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதுடன், அதிலுள்ள உண்மையான சாதகமான பெறுபேறுகளினை சமூகத்தின் நலனுக்காகப் பெற்றுக்கொள்வதே எமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

எமது அரசாங்கத்தினுடைய ‘வளமான நாடு - அழகான வாழ்க்கை’ என்னும் கொள்கைப் பிரகடனத்தில், அறிவு மற்றும் புத்தாக்கத்தினை அடிப்படையாகக் கொண்ட மாற்றத்திற்குரிய பொருளாதாரத்தை நோக்கி இலங்கையினை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பதினை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின், நாம் பாரம்பரியக் கட்டமைப்பில் இருந்து விலகி புத்தாக்கங்களினை தழுவிக்கொள்ள வேண்டும். புத்தாக்கம் என்பது வெறுமனே ஒரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மாத்திரமல்ல. நாம் எதிர்நோக்குகின்ற சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் மிகவும் பொருத்தமான, எளிமையான மற்றும் வினைத்திறன்மிக்க தீர்வாகவும் அது அமையலாம்.

அரசாங்கம் என்கின்ற வகையில், கடந்த காலப்பகுதியில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பாரிய முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக, தேசிய AI மற்றும் டிஜிட்டல் மாற்றக் கட்டமைப்பினை செயற்படுத்துவதன் ஊடாக அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்நுட்பத் தரநிலைகளினை உருவாக்குவதற்கு நாம் முன்முயற்சி எடுத்துள்ளோம்.

அதேபோல், பாடசாலை முறைமையில் STEM கல்வி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவினை மேம்படுத்துவதற்கும், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் புத்தாக்கங்களினை வணிகமயமாக்கி உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கும் நாம் நடவடிக்கைகளினை மேற்கொண்டு வருகின்றோம். உலகின் தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தும் நாடொன்றாக இருப்பதிற்குப் பதிலாக, உலகிற்கே புதிய தொழில்நுட்பத் தீர்வுகளினை வழங்கும் புத்தாக்க நாடாக இலங்கையினை மாற்றுவதே எமது இலக்காகும்.

அரசாங்கத்தினுடைய குறித்த இலக்கை நோக்கிய பயணத்தில், தேசிய விஞ்ஞான மன்றத்தால் ஏற்பாடு செய்யப்படும் குறித்த விஞ்ஞானப் பிரபலப்படுத்தல் விருது வழங்கும் விழா, எமது இளைஞர் தலைமுறையினரை ஆர்வத்தோடு, கேள்வியெழுப்பும் மனப்பாங்குடனும், படைப்பாற்றலுடனும் பொறுப்புடனும் விஞ்ஞானத்தினை கற்க மேலும் ஊக்குவிக்கும் மிக முக்கியமான சந்தர்ப்பமாகும்.

ஆகவே, கேள்விகளைக் கேட்கவும், புதிய கருத்துக்களினை ஆராயவும், எமது சமூகமும் நாடும் எதிர்நோக்கும் சவால்களுக்குத் தீர்வுகளினை கண்டறியவும் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தினையும் சரியான முறையில் பயன்படுத்துவதில் எமது மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட வேண்டும். வளர்ச்சியடைந்து வரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தின் வழிகாட்டிகளாகவும் பங்காளிகளாகவும் நாம் இருக்க வேண்டும். உலகில் இருந்து எமது நாட்டிற்குத் தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, எமது நாட்டில் இருந்து உலகிற்குத் தொழில்நுட்பத்தினை பகிர்ந்தளிக்கும் நாடொன்றைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” எனவும் பிரதமர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சினுடைய செயலாளர் கலாநிதி ரோஷினி திசாநாயக்க, தேசிய விஞ்ஞான மன்றத்தினுடைய தலைவர் கலாநிதி சுதத் சமரவீர, பணிப்பாளர் நாயகம்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now