New Updates! Fresh news just arrived.

வீட்டு நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்!

News

வீட்டு நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்!

August 2, 2026 12:51 am
வீட்டு நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்!
பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டம் – 2026 இன் கீழ் "தனக்கான ஓர் இடம்; அழகான வாழ்க்கை" எனும் கருப்பொருளில், சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் தலா 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 17 பயனாளிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வீட்டு நிர்மாணப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா நேற்று (31) நேரடியாகச் சென்று களஆய்வு செய்ததுடன், உரிய பயனாளிகளுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.

பிரஜாசக்தி குழுக்களின் தவிசாளர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின் போது, வீடுகளின் கட்டுமான நிலவரங்களைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், நிர்மாணப் பணிகளை எவ்வித தாமதமுமின்றி விரைவாகப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான பொறிமுறைகளையும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இப்பயணத்தின் போது, சாய்ந்தமருது பிரதேசத்தின் 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சேர்ந்த பிரஜாசக்தி குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now